districts

img

மேட்டூர் தருமபுரி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

சேலம், ஜூலை 27- மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை யோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 6 மருத்துவர்கள், 9 செவிலியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 30 படுக்கை வசதி உள்ளது. மேலும், சித்த மருத்துவ பிரிவும் இங்கு இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் 200க்கும் மேற் பட்டோர் சளி, காய்ச்சல், விபத்து முதலுதவி, தடுப்பூசி போட் டுக்கொள்ளவும், கர்ப்பிணி பெண்கள் பல்வேறு பரிசோதனைக் காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு பயன்ப டுத்திய ஊசிகள், கையுறைகள் மற்றும் பெட்டிகள், காலி மருந்து பாட்டில்களை எதிரே உள்ள மேட்டூர் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மருத் துவக் கழிவுகளை முறையாக கையாள உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;