districts

img

தனியார் நுண்நிதி நிறுவன அடாவடியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக 1- தனியார் நுண் நிதி நிறுவனங்க ளின் அடாவடி செயல்பாட்டைக் கண் டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்ட் ்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பல தனியார் நுண் நிதி நிறுவனங்களில் தொழிலாளர் கள், பொதுமக்கள் தங்கள் வாழ்வா தார தேவைக்காக கடன் பெறுகின்ற னர். இதனை தவணை முறையில் திரும்ப செலுத்தி வருகின்றனர். இந்நி லையில், கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக் கள் வருமானமின்றி இருக்கும் சூழ் நிலையிலும், பணத்தை கட்ட சொல்லி நுண்நிதி நிறுவனங்கள் கெடுபிடி காட் டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் எக்விடாஸ், ஆர்பிஎல், கிராமசக்தி, கினரா கேபிடல், ஐடி எப்சி, உஜைவன் போன்ற நுண்நிதி நிறுவன ஊழியர்கள் பண வசூலில் ஈடுபடும்போது பெண்களை திட்டுவ தும், பணத்தை கட்டாயம் கட்ட வேண் டும் என மிரட்டுவதும்,வட்டிக்கு வட்டி, அபராத வட்டி போடுவது, வசூல் என்ற பெயரில் அடியாட்களை வைத்து மிரட் டுவதுமாக இருந்துள்ளனர். தொழி லாளர்களை, பொதுமக்களை மிரட் டும் தனியார்  நுண்நிதி நிறுவனங்க ளின் இத்தகைய அராஜக போக்கை கண்டித்தும், அவர்கள் மீது நடவ டிக்கை எடுத்திட கோரியும், எடப்பாடி யில் இயங்கி வரும் கிராம சக்தி, என் விடாஸ் மற்றும் விஸ்த்தார் நுண்நிதி நிறுவனங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எடப்பாடி தாலுகா குழு உறுப்பினர் கே.நடரா ஜன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  

இதில், மாவட்டச் செயலாளர் பி. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு எம். குணசேகரன், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மேவை.சண்முகராஜா, எடப்பாடி தாலுக்கா செயலாளர் பெரி யண்ணன், மாவட்டகுழு உறுப்பினர் கே.ராஜாத்தி, சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எஸ்.முத்துசாமி விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, எடப்பாடி தாலுகா குழு உறுப்பினர், ஆர்.ஸ்டா லின், அ.மோகன்ராஜ், விசைத்தறி சங்கத்தை சார்ந்த ஜி.பழனிச்சாமி, டி.மூர்த்தி, எ.மாணிக்கம், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கவிதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;