districts

20 ஆண்டு வாகனம் காலாவதியாவதால் பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம்

சேலம், ஜூலை 27- சொந்த உபயோகத்திற்காக 20 ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் வாகனங்கள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு காலாவதியாகிறது. அதனால் பழைய வாக னத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என்று போக்குவரத்து அதி காரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில், 15 முதல் 20 ஆண்டுகளான வாகனங்கள் 20 முதல் 25 சதவிகிதம் இருக்கும் என தெரிகிறது. இதுபோன்ற வாகனங்களால் காற்று மாசடைவதாகவும், சுற்றுச்சூழல் கடு மையாக பாதிக்கப்படுவதாகவும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை பரிசீலித்த ஒன்றிய அரசு புதிய வாகன உபயோக சட்டத்தின்படி சொந்த உபயோ கத்திற்கு இருக்கும் வாகனத்தை 20 ஆண்டும், வாடகை வாகனம் 15 ஆண்டுகள் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று ஒன்றிய அரசு புதிய சட்டம் பிறப்பித்துள்ளது.

இச்சட்ட மானது வரும் 2022 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அம லுக்கு வருகிறது. இச்சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும். பின்பு அதற்குண்டான அரசு நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும். அதை அவர் கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்குட்பட்ட புதிய பிஎஸ் 6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஈடாக பயன் படுத்தி கொள்ளலாம். ஆனால், சிலர் தற்போது 20 ஆண்டுகளான இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் ரூ.2 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம்  என அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

எக்காரணம் கொண்டும் பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண் டாம். இந்த வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது. வாகனம் அனைத்தும்  உடைக்கும் போது வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப் படும். அனைத்தும் 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி யாகிவிடும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;