districts

img

தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றாதே அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆவேசம்

சேலம், ஆக.5-  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. தொழிலாளர்கள் விரோத சட்டங்களை இயற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. தொழிலாளர்கள் விரோத சட்டங்களை இயற்றக் கூடாது. நூறுநாள் வேலைத்திட்டத்தை சிதைக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  விவசாய தொழிலாளர்கள்  சங்க தலைவர் ஜி.பழனிச்சாமி  தலைமை வகித்தார்.

ஏஐடியூசி நிர் வாகி ஏ.சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். இதில், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிபிஐ விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.கே. செல்வராஜ், விதொச மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, சிபிஎம் தாலுகா செயலாளர் மு.பெரியண்ணன், ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் பரமேஸ்வரன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பி.நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன் றிய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பி னர்.

;