districts

img

ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் நிவாரண உதவி

சேலம், ஜூன் 16- ஆட்டோ மற்றும் சாலை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சிஐ டியு போக்குவரத்து தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு களை சேலம் விபிசி நினைவகத்தில் வழங்கினர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ கம் முழுவதும்  ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல் வேறு தொழிலாளர்கள் வாழ்வாதா ரம் இழந்து பாதிப்புக்குள்ளாகியு ள்ளனர். குறிப்பாக சாலைப் போக்கு வரத்து மற்றும் ஆட்டோ தொழிலா ளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர். இதனைத்தொடர்ந்து, சிஐடியு மாநிலக்குழு அறிவுறுத்தலின் பேரில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சி மேற்கொண்டனர் அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் சார்பில் சாலைப் போக்கு வரத்து மற்றும் ஆட்டோ தொழிலா ளர்கள் 100 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் வழங்கும் நிகழ்ச்சி விபிசி நினை வகத்தில் சிஐடியு மாவட்ட செயலா ளர் டி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

 இதில், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட பொது செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, துணை பொது செய லாளர் டி.செந்தில்குமார், கோட்ட தலைவர் கே.செம்பான், கோட்ட பொருளாளர் எம்.சேகர் சாலை போக்குவரத்து சங்க மாவட்ட பொரு ளாளர் வேலுமணி, உதயகுமார், போக்குவரத்து அரங்க நிர்வாகி இள வழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.  மேலும், தமிழக அரசு சாலைப் போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை ரூ.7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண் டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக் கும் 10 கிலோ அரிசி வீதம் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

;