districts

img

மக்கள் விசாரணை மன்றத்தில் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; பொறுத்து கொள்ள முடியாத பாஜகவினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விசாரணை மன்றத்தில் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் நிகழ்ச்சி சிபிஎம் வடக்கு மாநகர குழு சார்பில் சாமிநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இதனை எதிர்த்து பாஜகவினர் பள்ளப்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் விசாரணை மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வு தண்டனை கூண்டுக்குள் மோடியின் உருவம் போன்று வேடமணந்த ஒருவரை வைத்து நடைபெற்றது. இதற்கு நடுவராக மூத்த வழக்கறிஞர் கே. ஆர். மாசிலாமணி பங்கேற்றார்.

இதில் கூட்டாட்சியை சிதைக்கும் மோடி அரசு என்ற தலைப்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மோடி அரசு மீதான பொருளாதார குற்றங்கள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, மோடி அரசின் மொழி திணிப்பு குறித்து முற்போக்கு எழுத்தாளர் சங்க கௌரவத் தலைவர் இலா.வின்சென்ட் பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க தவறிய பாஜக அரசு என கே. ஜோதிலட்சுமி ஒன்றிய பாஜக அரசின் நிதித்துறை குறித்து வங்கி ஊழியர் சங்க மாநில செயலாளர் எஸ்.ஏ. ராஜேந்திரன்

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன்குமார் வங்கித் துறையை சீரழிக்கும் மோடி அரசு குறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி எஸ். ரகுபதி, வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய மோடி அரசு,  கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க தவறிய ஒன்றிய அரசு, பாஜக அரசின் எரிபொருள் விலை உயர்வு, பாஜகவின் மதவெறி நடவடிக்கைகள், குடியுரிமை சட்டம், மின் துறையை சீரழிக்கும் பாஜக அரசு, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒன்றிய அரசு, மோடி அரசின் நிவாரணமும் தடுப்பூசியும், பொதுத்துறை சீரழிக்கும் மோடி அரசு, ஜனநாயக உரிமைகளை பறிக்கும் பாஜக அரசு,

மோடி அரசும் நீதித்துறையும் அரசியல் சாசனமும், குறித்து சிபிஎம் வடக்கு மாநகர முன்னணி ஊழியர்கள் வி. வெங்கடேஷ், பி.ராஜேஷ்குமார், பி. செந்தில்குமார், ஆர்.வி. கதிர்வேல், கே. ராமச்சந்திரன், எஸ். சசிகுமார் ஆர். கே. சங்கர், குரு பிரசன்னா, டி. மனோகரன், டி. நந்தகுமார், ஆர்.மோகன் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

 மோடிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் விசாரணை மன்றத்தின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாத பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

;