districts

img

சேலம் கோட்டத்தில் நகர பேருந்துகளில் இலவசமாக 60 சதவிதம் பெண்கள் பயணம்

சேலம், ஜூலை 26- சேலம் உட்பட 4 மாவட்டங்களில் அரசு டவுன் பேருந்துகளில் இலவசமாக 60 சத விகித பெண்கள் பயணம் செய்துள்ளனர். மேலும், அனைத்து பேருந்து நிறுத்தங்களி லும் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் கட் டணமின்றி பயணிக்கலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அரசு டவுன் பேருந்துக ளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தார். அனைத்து ஊர்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதனால், பெண்கள், திரு நங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் கட் டணமின்றி இலவமாக பயணிக்க தனி பய ணச்சீட்டை போக்குவரத்து கழகம் அச்சிட்டு, வழங்கியுள்ளது. நகரப் பகுதியில் அரசு டவுன் பேருந்துகளில் ஏறும் பெண்கள், திருநங்கை கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களின் உதவியாளர்களுக்கு கட்டணமில்லா  பயணத்திற்கான பயணச்சீட்டு வழங்குகின்ற னர். சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மாநகர பகுதியில் இயக்கப் படும் டவுன் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை பெற்று பெண்கள், திரு நங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள் 60 சதவிகி தம் பேர் பயணித்து வருகின்றனர். இதனால், சேலம் கோட்டத்திற்குட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் டவுன் பேருந்துகளி லும் டவுன் பேருந்துகளில் கட்டணமில்லா பய ணச்சீட்டுகளில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் பயணித்து வருகின்றனர்.

இதனி டையே அரசு டவுன் பேருந்துகளில் கட்டண மில்லாமல் பயணிக்கும் பெண்கள், திருநங் கைகள், மாற்றுத்திறனாளிகளிடம் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பின் பற்ற வேண்டும் என போக்குவரத்து அதிகாரி கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகை யில், டவுன் பேருந்துகளில் பெண்கள், திரு நங்கைகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவு பயணிக்கின்றனர். தினமும் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை கணக்கிட கட்ட ணமில்லா பயணத்திற்கு தனி பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. சேலம் கோட்டத்திற்குட் பட்ட நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் அரசு டவுன் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டுக ளில் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். 60 சத விகிதம் அளவுக்கு பெண்கள் பயணம் செய் கின்றனர்.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பய ணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக் கூடாது. பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத் தத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கை யில் அமர உதவி புரிய வேண்டும்.

பெண்  பயணிகளிடம் கோபமாகவோ, ஏளனமா கவோ, இழிவாகவோ பேசக்கூடாது. பேருந் தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அர சின் இந்த உத்தரவை எவ்வித புகாரும் இன்றி செயல்படுத்த ஏதுவாக அனைத்து ஓட்டுநர் கள், நடத்துநர்கள் தெரிந்து கொள்ளும் வகை யில் அறிவுத்த வேண்டும். ஏதாவது, புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும், என்றார்.

;