இந்த செயலியில் ரயில் டிக்கெட் எடுக்கலாம்!
இந்திய ரயில்வேயின் யு.டி.எஸ் (UTS - Unreserved Ticketing System) செயலி மூலம் எங்கிருந்து வேண்டுமானால் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் (Unreserved Ticket) மற்றும் நடைமேடை டிக்கெட் (Platform Ticket) எடுக்கலாம். தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களில் உள்ள பயணிகள் இந்த செயலியின் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்களை எடுத்துக்கொள்ளலாம். 200 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட தூரம் பயணிக்கும் பயணிகள், 3 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை பெற முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து பயனர்கள் இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணிகள் தனது மொபைல் எண், பெயர், பாஸ்வேர்ட், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். யு.டி.எஸ் செயலியில் நடைமேடை டிக்கெட் பதிவு செய்வது எப்படி? 1) யு.டி.எஸ் செயலிக்கு சென்று login செய்யவும். 2) மெனுவில் ‘Platform Booking’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 3) பின்னர் Paperless Format ஐ தேர்வு செய்து, ரயில் நிலையத்தின் பெயர் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 4) வாலட் அல்லது பிற கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தி ‘Book Ticket’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் புதிய அம்சம்!
வீடியோ அழைப்பின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய எஃபக்ட்கள் (Effects) மற்றும் ஏ.ஆர் ஃபில்டர்களை (Augumented Reality Filters) வசதிகளை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகின்றது. இது தொடர்பாக WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையில், WhatsApp iOS beta (v24.17.10.74) முகத்தைப் பொலிவுடன், கரும்புள்ளிகளை மறைத்து அழகாகக் காண்பிக்கவும் பல்வேறு ஃபேஷியல் ஃபில்டர்கள் (Facial Filters) வழங்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ அழைப்புகளில் பேசும் போது பேக்ரவுண்ட்டை blur செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் ஒரு முறை இந்த ஃபில்டர் settings-ஐ செய்தாலே போதும், அடுத்தடுத்து வரும் அழைப்புகளுக்கு ஃபில்டர் settings-ஐ வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் AR Effects மற்றும் Filters தற்போது ஒரு சில பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.