சென்னை, ஜூலை 23-
விவோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வித மாக பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப் போது அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அதன் ஒய் மாடல் வரிசை யில் நவீன வடிவமைப்பில் அதன் ஒய் 27 ஸ்மார்ட்போனை அறி முகம் செய்துள்ளது. இதன் வெளிப்புறம் 2.5டி கண்ணா டியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 16.86செமீ, அதாவது 6.64 இன்ச் புல்எச்டி+ டிஸ்பிளே நல்ல வெளிச்சத்திலும் ஸ்மார்ட்போனை பார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. நுகர்வோருக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில், இதில் 6 ஜிபி மற்றும் 6 ஜிபி நீட்டிக் கப்பட்ட ரேம் மற்றும் 44 வாட்ஸ் ப்ளாஷ்சார்ஜ் ஆகியவை உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் கூடிய இதன் விலை ரூ14,999 ஆகும். இது பிளிப்கார்ட், அமே சான், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் இந்தியா முழு வதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக் கும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.