districts

கொரோனா தொற்று சிகிச்சை முடிந்தவர்கள் வீட்டிற்கு செல்ல வாகன ஏற்பாடு செய்யப்படுமா?

விழுப்புரம், மே.12- கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பொது போகுவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா தொற்று சிகிச்சை முடிந்தவர்கள் வீட்டிற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பு வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரானா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் சாலாமேடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள  கொரோனா தோற்று சிகிச்சை மையத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்ச்சாஜ் செய்யப்பட்டனர். பொது முடக்கம் காரணமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல எந்த வாகனமும் வராததால் நாள் முழுக்க அங்கேயே காத்துக் கிடந்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். பொதுமுடக்க காலத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தனி வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

;