districts

img

மலையோர விவசாயம் பாதுகாக்கப்படுமா?

திருவண்ணாமலை அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர் வட்ட 9 ஆவது மாநாடு  கேளூர், சந்தை மேட்டில்  நடைபெற்றது. கி.பாலமுருகன்  தலைமை தாங்கினார். அ. உதய குமார் கொடியேற்றி வைத்தார். சு.தண்டபாணி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வவன்  துவக்க உரையாற்றி னார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் இரா.சிவாஜி, வரவு-செலவு அறிக்கையை அ.உதயகுமார் ஆகியோர்  சமர்ப்பித்தனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உரையாற்றினார். இந்த மாநாட்டில் இரா.இரவிதாசன்  செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.   கேளூர் சந்தைமேடு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.வெங்கடே சன் உரையாற்றினார். வே.வெங்கடேசன் நன்றி கூறினார். கேளூர் சந்தைமேட்டில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், ஜவ்வாதுமலையில் உருவாகும் கமண்டல நாகநதி, மஞ்சள் ஆற்றை துர்வாரி செப்பனிட வேண்டும், போளூர் தாலுக்காவில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனை, கரவை மாடு வழங்க வேண்டும், தரணி சர்க்கரை அலை நிர்வாகம்,  தொழிலாளர்க ளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டிய பாக்கி பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.

;