districts

உளுந்தூர்பேட்டை மற்றும் சென்னை முக்கிய செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை

உளுந்தூர்பேட்டை, ஏப். 28- உளுந்தூர்பேட்டை அருகே காலைக் கடன் கழிக்க சென்ற இளம் பெண் வெட்டி கொல்லப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் அருகே சில குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இதில் பழனியாப்பிள்ளை, அவரது  மனைவி மலர் ஆகியோரின் வீடும் அமைந்துள்  ளது. இவர்களுக்கு பிரேமா (20), பிரபாகரன்  (18) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழனியாப் பிள்ளை இறந்துவிட்டார். இரண்டு பிள்ளை களையும் மலர் வளர்த்து வந்தார். இந்நிலையில் மலர் சின்னசேலம் அருகே  உள்ள அம்மையகரம் கிராமத்தில் தனது தாய்  வீட்டில் சில காலம் வசித்து வந்தார். அங்கு  அவரது உறவினரான பாலா (30) என்பவரை பிரேமா காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு தாய் மலரும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேமாவை அழைத்துக் கொண்டு சில வாரங்களுக்கு முன்பு மலர், ஆசனூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் புதனன்று (ஏப்.28) காலைக்கடன் கழிக்க வீட்டிற்கு அருகே  உள்ள தங்களுடைய பழைய குடிசையை தாண்டி முள் காட்டிற்கு பிரேமா சென்றுள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் பிரேமா வீடு திரும்பாத தால் மலர் தன்னுடைய மகளை தேடி பார்த்த போது முள் புதரின் அருகே தலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்ட  நிலையில் ரத்தம் வடிய, வடிய சுயநினை வின்றி கிடந்தார். இதனையடுத்து உடனடியாக காவல் துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்ட பிரேமா, பின்னர் முண்டியம்பாக்கம் கொண்டு செல்லப்  பட்டார். அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்  சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேமாவை வெட்டி யது அவரது காதலன் பாலாவா அல்லது வேறு யாருடைய செயலா என எடைக்கல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், டி.எஸ்.மோகன், திருநாவலூர் ஒன்றிய செய லாளர் ஜெ.ஜெயக்குமார், வழக்கறிஞர் மார்த்தாண்டம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்த்து பிரேமாவின் உற வினர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு
கூடுதல் ஊழியர்கள் நியமனம்

சென்னை, ஏப். 28- கொரோனா தடுப்பு பணி யில் ஈடுபடும் மருத்துவ பணி யாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை அதிகப்ப டுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயி ரத்தை நெருங்கி வருகிறது. இருப்பினும் கடந்தாண்டை போல தொற்று தடுப்பு நட வடிக்கை, சிகிச்சை அளித் தல் போன்ற பணிகளில் மாந கராட்சி ஈடுபடவில்லை என்று  மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இந்நிலையில், மாநக ராட்சி மருத்துவமனைகளில் பணியாற்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நிய மிக்க அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி  ஒருவருட ஒப்பந்த அடிப்படை யில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நேரடி யாக நியமனம் செய்யப்படு கிறார்கள். இதற்கான நேர்காணல் ஏப்.29, 30 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி ரிப்பன்  மாளிகையில் நடைபெறு கிறது. தகுதி உள்ள மருத்து வர்கள், செவிலியர்கள் நேரடி யாக கல்வி தகுதி சான்றிதழ்க ளுடன் பங்கேற்கலாம். மருத்துவர்களுக்கு மாத சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் எனவும், செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பதவி முற்றிலும் தற்கா லிகமானது, எந்த ஒரு காலத்  திலும் பணி நிரந்தரம் செய்யப்  பட மாட்டாது என்றும் கூறப் பட்டுள்ளது.

;