districts

img

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பள்ளி இடத்தை மீட்க வேண்டும்

மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 15- சட்ட விரோதமாக விற்பனை செய்யப் பட்ட சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளி இடத்தை மீட்கக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா,  செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை செவ்வாயன்று (ஜூன் 15)  ரிப்பன் மாளிகையில் சந்தித்து மனு அளித்த னர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு: வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசி னர் உதவிபெறும் பள்ளியின் கட்டிடங்களை  அரசின் அனுமதியின்றி சட்ட விரோதமாக இடித்து வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக பயன்படுத் தப்பட்டு வரும் நிலத்தை மீட்டு கல்வி பயன்  பாட்டிற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி தொடர்  இயக்கங்களை நடத்தி வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை, பெருநகர சென்னை பெரு நகர மாநகராட்சி செயற்பொறியாளர், வில்லி வாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்ட விவ ரங்களில், சிங்காரம்பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, விற்பனை செய்யப்பட்ட இடங் களை மீட்டு, பள்ளியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி 2020 டிசம்பர் 29ந் தேதி அப்போதைய ஆணையர் பிரகாஷிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்வைத்த இந்தக் கோரிக்கையை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக திமுக தலைவரும், தற்போதைய முதல மைச்சருமான் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது உறுதி அளித்தார். எனவே, பள்ளி யின் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி யளித்தார். மேலும், மனுவின் மீது உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை பணித்துள்ளதாகவும் அவர் கூறியதாக சிபிஎம்  தலைவர்கள் தெரிவித்தனர்.

;