districts

கல்லீரலில் கொழுப்பு படிதல் பிரச்சனைக்கு உடல் குறைப்பு மூலகமாக தீர்வு காணமுடியும்

சென்னை, ஏப். 8- கல்லீரலில் கொழுப்பு படி தல் பிரச்சனையை என்.ஏ. எஃப்.எல் என்று மருத்து வர்கள் அழைப்பர். அதாவது  மதுப்பழக்கம் இல்லாத வர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் மற்றும் உடல் பயிற்சியின்மை, மர பணு ரீதியான பிரச்சனை யால் கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து அதன்  செயல்படுகளை குறைக்கி றது. ஒருகட்டத்தில் கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து கல்லீரல் அழற்சி நோய் உருவாகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்ட றிந்தால் உடல் எடைக் குறைப்பு மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு கல்லீரலில் படிந் துள்ள கொழுப்பை படிப்படி யாக குறைந்து விடமுடியும் என்று சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் கல்லீ ரல் நோய்கள், உறுப்புமாற்று மற்றும் கல்லீரல் – கணைய அறுவைசிகிச்சைத் துறை யின் தலைவர் டாக்டர். கே.  இளங்குமரன் கூறினார். தற்போது நவீன மருத்துவ  சாதனங்கள் உள்ளதால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கமுடி யும் என்றார்.

முன்னதாக  காவேரி மருத்துவமனைகள் குழுமம் தொடங்கியிருக்கும்  கல்லீ ரல் நோய்கள் மற்றும்  உறுப்புமாற்று சிகிச்சை  மையத்தின் செயல்பாடு களை மருத்துவர் விளக்கி னார். மருத்துவ சிகிச்சை, கல்லீரல் டயாலிசிஸ் (கல்லீ ரல் துணை ஒழுங்குமுறை)  மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை உட்பட, கல்லீர லுக்கான முழுமையான சிகிச்சை பராமரிப்பு இங்கு உள்ளது என்றார். முதல் முறையாக இந்த  மருத்துவமனையில் வெவ் வேறு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் முறையே 56, 48 மற்றும் 37 வயதுள்ள ஆண் நோயாளி களுக்கு கல்லீரலை தான மாக வழங்கியதால் வெற்றி கரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது. உலகளவில் உயிரி ழப்பிற்கான முன்னணி கார ணங்களில் ஒன்றாக கல்லீரல் நோய்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் கல்லீ ரல் உறுப்புமாற்று சிகிச்சை  அவசியமாக உள்ளவர்க ளின் எண்ணிக்கை 20,000-க்  கும் அதிகமாகும்.  ஆனால்,  அவர்களுள் 2000 நோயாளி களுக்கு மட்டுமே  உறுப்பு மாற்று சிகிச்சைக்கான உறுப்புகள் கிடைக்கப்பதாக மருத்துவமனையின் நிர்வாக  இயக்குனர் டாக்டர். மணி வண்ணன் செல்வராஜ் கூறி னார். கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தை தொடர்பு கொள்வதற்கான உதவி எண்: +91 7373653653

;