districts

புதிய ‘நியோ 7 புரோ’ ஸ்மார்ட்போன்

சென்னை, ஜூன் 18-

     செயல்திறன்மிக்க ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் ஐக்யூஓஓ நிறுவனம் நியோ 7 வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி ‘நியோ 7 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.  

     நியோ 7 புரோ அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது.  அதிக விலைகொண்ட பிற ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து நவீன தொழில் நுட்பங்களையும் கொண்டிருப்பதோடு, பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.   அதன் செயல்திறன் மற்றும் கேமிங் திறன்களை மேம்படுத்த இதில் அதிக சக்திவாய்ந்த இரட்டை சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் கிரேட்டர் நொய்டாவில் இந்த செல்போன் தயாரிக்கப்படுகிறது.