சென்னை, ஜூன் 28-
சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் இளங்கலை பாடத்திட்டங்களுக்கு தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) அங்கீகாரம் அளித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான என்பிஏ, இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களை கடுமையான தர கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அவற்றுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. இந்த அங்கீகார செயல்முறையானது பாடத்திட்டம், ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு, மாணவர் ஆதரவு சேவைகள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டை உள்ளடக்கியதாகும். இந்த நிலையில் தொழில் சார்ந்த கல்வியை வழங்குவதில் இக்கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த என்பிஏ அங்கீகாரமானது இக்கல்லூரியின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்று டாக்டர் என்.எம். வீரையன், கல்வியியல் பிரிவு இயக்குநர் தீபக் நல்லசுவாமி ஆகியோர் கூறினர்.