districts

img

மயிலத்தில் சேலம் மாங்குயில் கலைக்குழு பிரச்சாரம்

மயிலம், டிச.23- சிபிஎம் 24-வது மாநில மாநாடு விழுப்பு ரத்தில் நடைபெறுவதை ஒட்டி மயிலம் ஒன்றியத்தில் 9 மையங்களில் சேலம் மாங்குயில் கலைக்குழுவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பாதிரா புலியூர் கிராமத்தில் துவங்கி மயிலம், நெடி, மொழியனூர், ரெட்டணை, பெரமண்டூர், பெரியாண்டப்பட்டு நிறைவாக கூட்டேரிப்பட்டில் முடிவடைந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்  டி .கஜமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர்கள் என்.அழகு சீலன், எஸ்.காளிதாஸ், எம்.மணி, ஆர்.கோவிந்தராஜ், கிளைச் செயலாளர் நெடி கலியமூர்த்தி, சோழிய சொற்குளம் தண்டபாணி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.