districts

img

விலை வீழ்ச்சியால் வாடிப்போன குண்டுமல்லி விவசாயிகள்

கிருஷ்ணகிரியில் வாசனை திரவியம் தொழிற்சாலை துவங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி ஜுன் 11- கிருஷ்ணகிரி மாவட்டம் காவே ரிப்பட்டிணம் சுற்றுப்புரத்தில் திம்மா புரம், அவதானப்பட்டி, புதூர், மலையாண்டள்ளி, வேலம்பட்டி, சின்னமுத்தூர் பாலேகுறி, பெரிய முத்தூர், குண்டலபட்டி, டேம் ரோடு ஆகிய பகுதிகளில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் குண்டுமல்லி பூ விவ சாயம் நடைபெற்று வருகிறது. பாத்தி கட்டி நடவு நட்டு மருந்த டித்து, நீர் பாய்ச்சி, செடியை பரா மரித்தல் என ஏக்கருக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை செல வாகிறது. கடந்தாண்டு கொரோனா துவங்கிய மார்ச் மாதத்திற்கு முன்பு  வரை குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன்  மாதங்களில் கிலோ 200, 300 ரூபாய்  வரை விலை போனது. பெங்களுரு போன்ற பெரும் நகரங்களில் சில நேரங்களில் கிலோ 600க்குக் கூட விற்கப்பட்டது. ஒரு முழம் பூ 50, 60 என விற்கப்படுவ துண்டு. ஆனால் கடந்தாண்டு கொரோனா தொற்று துவங்கியது முதல் பொதுமுடக்கம், வாகன கட்டுப்பாடுகள் காரணமாக பூ விலை  கடுமையாக சரிந்தது.

தற்போது குண்டுமல்லி பூ கிலோ  60 ரூபாய், 70 ரூபாய் என பாதி  விலைக்கும் குறைவாக இடைத்தர கர்கள் மூலம் பெங்களூரு, மேட்டுப்  பாளையம், ஈரோடு செண்ட் தொழிற்  சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்  படுகிறது. மிகக்கு குறைந்த விலைக்கு பூ விற்பனை செய்யப்படுவதால் வேலையாட்களுக்கு கூலி கொடுக்கக் கூட முடியவில்லை. பல நேரங்களில் இடைத்தரகர் கள் மூலம் விற்பனை செய்த பூவிற்கு  பணம் கிடைப்பதிலும் சிக்கல் உள்  ளது கொரோனா தொற்று துவங்கி யது முதலே குண்டுமல்லி விலை வீழ்ச்சி யால் விவசாயிகளுக்கு பெரிய அள வில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து திம்மாபுரம் குண்டு மல்லி விவசாயி நாராயணசாமி கூறு கையில், குண்டுமல்லி விவசாயத்தை யும், அதில் ஈடுபடும் விவசாயிகளை யும் பாதுகாத்திட கிருஷ்ணகிரி வட்டத்  தில் வாசனை திரவியம் தயாரிக்கும்  தொழிற்சாலையை அரசு துவக்க வேண்டும். கடும் பாதிப்புகளை சந்தித்  துள்ள விவசாயிகளுக்கு நிவாரண மும், மானியத்துடன் விவசாயக்கட னும், வழங்க வேண்டும், குண்டுமல்லி  பூக்களை நியாய விலைக்கு அரசே  நேரடியாக கொள்முதல் செய்து தொழிற்சாலைக்கு வழங்க வேண் டும் என்றார்.

;