districts

img

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாதவச்சேரி தடிகாரன் கோவில் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைத்தல் பணிகளை பார்வையிட்டு, பணித்தள பொறுப்பாளரிடம் பணி குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.