districts

img

11 விழுக்காடுஅகவிலைப்படியை வழங்குக ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

கடலூர்,அக்.17-  ஒன்றிய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட ஆறாவது மாவட்ட பேரவை மாவட்ட தலைவர் என்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் ராமானுஜம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பேரவையை துணைத்தலைவர் டி.குப்பன் துவக்கி வைத்து பேசினார்.  மாவட்ட செயலாளர் கோ.பழனி அறிக்கை சமர்ப்பித்தார், மாவட்ட பொருளாளர் குழந்தைசாமி வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். பேரவையை வாழ்த்தி ஓய்வுதிய கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஹரிகிருஷ்ணன், குடியிருப்போர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். மருதவாணன், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வு சங்கத்தின் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் மற்றும் பல்வேறு சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் ஆர்.ராமசாமி, ஜி.சுந்தரராஜன், சி.தேவராஜ், ராமநாதன், உள்ளிட்ட வாழ்த்திப் பேசினர். மாநில செயலாளர் ஆர்.மனோகரன் பேரவையை நிறைவுசெய்து சிறப்புரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடலூரில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட 58 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

;