மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காது கேளாதோர் அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், அரசு வேலையில் காது கேளாதோர் 1 விழுக்காடு இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்த வேண்டும், அனைத்து அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் மனு கொடுத்தனர்.