ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அணிவதற்கான வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் மற்றும் கடந்த ஆண்டு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை ஆகியவற்றை கல்லூரி நிறுவனர் தம்பிதுரை வழங்கினார். இதில் கல்லுாரி முதல்வர் சோமசேகர், இயக்குனர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்தரெட்டி, கண்காணிப்பாளர் வாசுதேவா, இருப்பிட மருத்துவர் பார்வதி, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ரங்கநாத், மனநல மருத்துவர் கண்ணன் கிரிஸ், வேளாங்கண்ணி பள்ளியின் தாளாளர் கூத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.