districts

img

அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் கொள்கைகளை உள்வாங்கி சனாதனத்தை முறியடிப்போம் தீ.ஒ.மு வடசென்னை மாவட்ட மாநாட்டில் கவிஞர் சுகிர்தராணி பேச்சு

சென்னை, செப்.25- தீண்டாமைக் கொடு மைக்கு எதிராக போராடு வது மட்டுமன்றி வர்க்க வேறுபாடுகளை களையவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகிறது என்று கவிஞர் சுகிர்தராணி பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட சென்னை மாவட்ட 4ஆவது மாநாட்டை ஞாயிறன்று (செப். 25) துவக்கி வைத்து பேசுகையில், சாதிக் கொடுமை எங்கும் நிறைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிராக பண்பாட்டு அமைப்புகள், தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது இன்னும் கூர்மைப் படுத்தப்பட வேண்டும். கலை, இலக்கியங்கள், ஓவியம், இசை உள்ளிட்ட படைப்புகள் மூலம் பெண்ணியத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும். சாதியின் வெளிப்பாடாக மதமும் மதத்தின் வெளிப்பாடாக சாதியும் பிணைந்திருக்கிறது. மதத்தின் வேரை தோண்டி களையாமல் சமூக அவலத்தை ஒழிக்க முடியாது. அம்பேத்கர், மார்க்ஸ், பெரியாரின் கொள்கைகளை சரி யாக புரிந்துகொண்டு செயல்படவேண்டியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பிற அமைப்பு களையை விட கூடுத லாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பணி யாற்றிவருகிறது என்றும் அவர் கூறினார்.  ஞாயிறன்று (செப். 25) மாதவரம் கணக்கன் சத்திரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வடசென்னை மாவட்டத்தலைவர் மா. பூபாலன் தலைமை தாங்கினார்.

மாவட்டத் துணைத் தலைவர் வி.ஆனந்தன் வரவேற்றார். மணிநாத் (தமுஎகச) அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச்செயலாளர் வி.ஜானகிராமன் வேலை அறிக்கையையும் பொரு ளாளர் எம்.ராஜ்குமார் வரவு,செலவு அறிக்கையை யும் சமர்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில துணைச்செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார். மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிறை வுரையாற்றினார். வடசென்னையில் உயர்கல்வி நிறுவனங்களை உடனே துவக்கவேண்டும், பாதாள சாக்கடை, மலக்குழி மரணங்களை தடுக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்தவேண்டும், பட்டியல் இன இளைஞர்  களுக்கு தொழில் தொடங்க தாட்கோ கடன் வழங்குவதை எளிமை யாக்கவேண்டும், ஆக்கிர மிப்பு என்று சொல்லி பட்டி யலின, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் வசிக்கும் குடி யிருப்புக்களை அகற்றும் போக்கை கைவிட வேண்டும், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பு வதில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
32பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலை வராக எம்.ராஜ்குமார்,   செய லாளராக வி.ஜானகிராமன், பொருளாளராக வி. ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக டி.நடராஜன் (இன்சூரன்ஸ்அரங்கம்) நன்றி கூறினார்.

;