districts

img

வேலூரில் 26 இடங்களில் காவல் சோதனை மையங்கள்

வேலூர் மே 18- வேலூர் டோல்கேட், புதிய பேருந்து நிலை யம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில்  உள்ள சோதனை மையங்களை காவல்துறை  துணைத் தலைவர் காமினி ஆய்வு செய்தார். இரணடு மற்றும் நான்குசக்கர வாகனங்க ளில் வருவோரை நிறுத்தி அவர்கள் செல்லு மிடம் விசாரித்து உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று கேட்டு தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தி னார். பணியில் உள்ள காவலர்கள் பாது காப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கூறி காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி னார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

வேலூர் காவல் எல்லைக்குட்பட்ட 26 இடங்களில் காவல் சோதனை மையங்கள் அமைத்துள்ளோம். அடையாள அட்டை அணிந்துள்ளவர்களுக்கு ஓரு வழியும், அடை யாள அட்டை இல்லாதவர்களுக்கு தனி வழி  என அமைத்து சோதனைகள் செய்கிறோம், இதுவரை காரணமின்றி வெளியில் சுற்றித்  திரிந்தவர்களிடம் இருந்து 760 வாகனங் களை பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். தொற்று பரவலை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர்க்கு  இ.பதிவு அவசியம், வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 6 இன்டர் ஸ்டேட் பார்டர் செக்போஸ்ட் உள்ளது. இதுபோக நான்கு இன்டர் ஸடேட் பார்டர் செக்போஸ்ட் திருப்  பத்தூரில் உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர்  சரகத்தில் 38,043 பேர் மீது மாஸ்க் அணி யாத வழக்குகளும், 2,651 பேர் மீது தனிமனித  இடைவெளி கடைபிடிக்காத வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உடன் கூடுதல் கண்காணிப்பாளர் மதிவா ணன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  மற்றும் வடக்கு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.

;