districts

img

வங்கதேச இளம் பெண்ணிற்கு சிடி வழிகாட்டுதலில் நவீன சிகிச்சை

கடலூர், செப்.16- சிறுமியை கடத்திச் சென்ற இளைஞருக்கு  போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகி லுள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கலி யன் மகன் சின்னதுரை (22). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்து 10 ஆம் வகுப்பு படித்து  விட்டு வீட்டில் இருந்து வந்த 15 வயது  மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.  மேலும், திருமணம் செய்துக் கொள்வதாக வும் கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார்.  தற்  கொலை செய்துக் கொள்வதாக மாணவியை  மிரட்டி பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, கடந்த 12.4.2019 அன்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறு மியை இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சிதம்பரம் அருகிலுள்ள கொத்  தட்டை கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள் ளார். அங்கிருந்து சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்  றது தொடர்பாக அவர்களது பெற்றோர் திட்டக்  குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சின்னதுரையை கைது செய்த னர். கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட தாக அவரது நண்பர்கள் 4 பேரையும் கைது  செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூரி லுள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. புதன்கிழமையன்று நீதிபதி எழிலரசி வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சின்னதுரைக்கு 20 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதனை யடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கு ரைஞர் கலாசெல்வி கூறுகையில், வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகளை பாலி யல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதிகள் படி  அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்  தின் கீழ் ரூ.5 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை  எடுக்க வேண்டுமென தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என்றார். மேலும், வழக்கில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாக குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்  பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

;