கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத்தை ஆதரித்து ஓசூரில் சிறுபான்மை மக்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது. நான்கு மசூதிகள் வாயிலில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மாநகர செயலாளர் மேயர் எஸ்.ஏ.சத்யா, சிபிஎம் மாநகர செயலாளர் சி பி ஜெயராமன்,எம்எம். ராஜு,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,பிஜி.மூர்த்தி,குணசேகரன்,காங்கிரஸ் மற்றும் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.