districts

கொரோனா தடுப்பு மருந்து தனியார் வசம் ஒப்படைக்க வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, ஏப். 22- கொரோனா தடுப்பு மருந்து தனியார் வசம்  ஒப்படைக்கும் முடிவிற்கு வணிகர் பேரமைப்பு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு தனியார்வசம் விடுவது ஏற்புடைய தல்ல. மத்திய அரசு, அனைத்து மாநிலங்க ளுக்கும் சீரான தடுப்பூசி விநியோக முறையை  மேற்கொள்ள வேண்டும். மேலும், தனியார்  வசம் அளிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு  விலைவாசி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். கொரோனா 2ஆவது அலை பர வலை கட்டுப்படுத்த அரசு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், கடந்த 2 ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியா மல், பெருந்தொற்று முதல் அலை காரணமாக கடந்த ஓராண்டு முடக்கப்பட்டிருந்த வணிகம்,  ஓரளவு மீண்டு வரும் நிலையில், 2ஆவது அலை  தாக்கமும் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளும் பெருமளவு வணிகத்தை பாதித்து இருப்பது அனைவரின் வாழ்வாதாரத்தையும் கடும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது. கண்டனம் அரசின் கட்டுப்பாடுகள் வணிகர்களின் மீது திணிக்கப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களை தண்டனை மற்றும் அபராதங்களுக்கு சட்ட விரோதமாக உள்ளாக்குவதை, வணிகர் பேரமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. உதாரணமாக கடைக்குள் வரும் வாடிக்கையாளர்,

கொரோனா விதிகளை பின்பற்றாததற்கு, கடை உரிமையாளரை தண்டனைக்கு உள்  ளாக்குவதும், அபராதம் விதிப்பதும் எந்தவகை யிலும் ஏற்புடையது அல்ல. மேலும், கடந்த  வாரம் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு சட்ட விதி களின்படி இரவு நேர வாகனக் கட்டுப்பாடுகள்,  வணிக போக்குவரத்தின் மீது திணிக்கப்படும்  போது, அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு  கிடைப்பதில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதோடு, விலைவாசி ஏற்றத்திற்கும் வழிவகுத்துவிடும். குறிப்பாக காய்கறி சந்தைகளுக்கு செல்லும் விவசாய விளைபொருட்கள் அழுகும் பொரு ளாக இருப்பதினால், போக்குவரத்து தடைகள்,  விளைபொருள் சேதாரத்திற்கு காரணமாகி, விவ சாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமலும், காய்கறி, பழம், பூ, தட்டுப்பாட்டிற்கும் காரணமாகி விடும்.

அதேபோல், இரவு 10 மணிமுதல் காலை 4  மணிவரை பயணிகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பகல் நேரங்களில்  பயணிகளின் கூட்டத்தை அதிகரிக்கும் சூழல்  ஏற்பட்டு அதனாலும் நோய் பரவல் ஏற்படும்  என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, மற்றும்  நேரக் கட்டுப்பாடுகள், சனிக்கிழமை கூட்ட நெரி சலுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே கொரோனா சட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள் மீது, பொள்ளாச்சி நகராட்சியில் வணிகத்திற்கும், தொழிலுக்கும் சம்பந்த மில்லாத, வணிகத்திற்கு எதிராக, வணிகர்களை  பாதிக்கும் புகார் மனுக்களின் மீது எடுக்கப்ப டும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்ப தோடு, அப்படிப்பட்ட நடவடிக்கைகளை கைவிட  வேண்டும்.

கடையடைப்பு நடத்த நேரீடும்

இலக்கு வைத்து அபராதம் விதிக்கும் நிலை  தொடர்ந்து நீடிக்குமானால், தொடர் கடை யடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உயர்மட்ட குழு கூடி முடிவெடுக்கும் நிலை உருவாகிவிடும் என்பதை, மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

;