districts

img

மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் சி.கருப்பையன் காலமானார்

சென்னை, ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் சி. கருப்பையன் உடல் நலக்க குறைவால் சனிக்கிழமை (ஜூன் 5) காலமானார். கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் பகுதியைச் சேர்ந்தவர் சி.கருப்பையன். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை பொழிச்சலூரில் வசித்து வந்தார். சென்னை விமான நிலை யத்தை குடியிருப்பு பகுதி களில் விரிவாக்கம் செய்  வதை எதிர்த்து மார்க்சிஸ்ட்  கட்சி தொடர் போராட்டம்  நடத்தியது.

அந்தப் போராட் டத்தில் கருப்பையன் அவ ரது மனைவி க.பரமேஸ்வரி, மகள்கள் பூர்ணிமா, பிரியா ஆகியோர் முன்னணியில் நின்று மக்களைத் திரட்டி னார். இந்தப் போராட்டத்தின்  வெற்றியை தொடர்ந்து அந்த  குடும்பமே மார்க்சிஸ்ட் கட்சி யின் ஆதரவாளர்களாக மாறி யது. அதன்பின்னர் பர மேஸ்வரி அவரது இரு மகள்களும் அகால மரண மடைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியோடு  இருந்து பல்வேறு பங் களிப்புகளை கருப்பையன் செய்து வந்தார். கடந்த மாதம் கொரோனா தொற்  றுக்கு ஆளான அவர் வட பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்க் சிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் எஸ். அரிகிருஷ்ணன் பாதுகாவல ராக இருந்து அவரை பராம ரித்து வந்தார். கொரோனா தொற்று குணமான நிலை யில், அவர் சிகிச்சை பல னின்றி காலாமானார்.

அவரது உடல் பொழிச்ச லூர் கமிஷ்னர் காலனி. 2ஆவது தெருவில் உள்ள  அவரது இல்லத்தில் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டி ருந்தது. அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் ப.செல்வ சிங், மாநிலக்குழு உறுப்பி னர் க.பீம்ராவ், செயற்குழு  உறுப்பினர்கள் செந்தில் குமார், எஸ்குமார் (தென் சென்னை), எம்.தாமு (மத்தியசென்னை), பகுதிச் செயலாளர்கள் எம்.சி. பிரபா கரன் (பல்லாவரம்), எஸ். அரி கிருஷ்ணன் (ஆலந்தூர்),  மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ். ஜெயசங்கரன், ப.  ஆறுமுகம், சிஐடியு மாநில  துணைத் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய். இஸ்மாயில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.. பின்னர் அவரது உடல்  குரோம்பேட்டை மயானத் தில் தகனம் செய்யப்பட்டது.

;