districts

img

லால்புரம் ஜாகீர் உசேன் தாயார் மறைவு

சிதம்பரம், செப் 27- சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தை சேந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியக் குழு உறுப்பினருமான எம்.எஸ் ஜாகீர் உசேன்  தாயார் எம்.எஸ் ஆமீனா பீவி உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (செப்.27) காலமானார். அவருக்கு வயது 84. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் லால்புரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆமீனா பீவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சி நாதன், கடலூர் மாநகர் செயலாளர் அமர்நாத், குமராட்சி ஒன்றியச் குழு உறுப்பினர் மாசிலாமணி, புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், நகரச் செயலாளர் மணவாளன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, சிதம்பரம் நகர தலைவர் அமுதா, லால்புரம் சிபிஎம் கிளைச் செயலாளர் ஆனந்தன், கட்சி உறுப்பினர்கள் மகாலிங்கம், வெற்றி வேல், சுரேஷ்குமார், ரவி உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர்.  இன்று அடக்கம் ஆமீனா பீவியின் உடல் சனிக்கிழமை (செப். 28) காலை 10 சிதம்பரம் நகரத்தில் உள்ள லப்பை தெரு பள்ளிவாசல் கபர்ஸ்தணில் அடக்கம் செய்யப்படுகிறது. ஆமீனா பீவிக்கு முகமதுயூசுப், முகமது அலி  உள்ளிட்ட 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர்.