கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது. அதில் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 108 மாணவிகளுக்கு புத்தகப்பைகளும், 3100 மாணவிகளுக்கு கேக்குகளும் ஐவிடிபி தொண்டு நிறுவனர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியர் உடன் இருந்தனர்.