districts

img

சமீபத்திய தொழில்துறை முன்னேற்றம்: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்

வேலூர், டிச.20- விஐடியில் இயந்திர வியல் துறை சார்பில் சமீபத்திய தொழில் துறை மற்றும் அமைப்பு பொறியியல் முன்னேற்றம் குறித்த சர்வ தேச கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கில் ஜெர்மனியில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கான்ஸ்டைன்டன் புளூம்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கருத்தரங்கில் அகில இந்திய தொழில்நுட்பக் குழு வின் இயக்குநர் டாக்டர். சுனில் லுத்ரா கவுரவ விருந்தினராக பங்கேற்றார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். கோ. விசுவ நாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், இணை துணைவேந்தர், பதிவாளர், இயந்திரவியல் துறை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவவர்கள் பங்கேற்றனர்.