districts

கல்வியில் நவீன மாற்றங்களை  உட்புகுத்தும் இன்ஸ்பையர்  

சென்னை,அக். 14- கல்வியில் நவீன மாற்றங்களை லேர்ன் என் இன்ஸ்பையர் புகுத்தி வருகிறது.  வாழ்க்கைக்கான கற்றல் துணையாக செயல்படும் இது  உலகின் சிறந்த அறிவை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது.   இந்தியாவின் சிறந்த அறிவை உலகிற்கு எடுத்துச் செல்கிறது.  பள்ளிக்கல்வி  முதல் கல்லூரி வரையும் பின்னர் பணியில் சேர என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வளர மாணவர்களுக்கு உதவுகிறது.   குறுகிய காலத்தில், லேர்ன் என் இன்ஸ்பையர்  நவீன கற்றல் முறை , டிஜிட்டல் தளம், பயிற்சியாளர்கள் வலையமைப்பு என விரிவடைந்துள்ளது.     1000 பள்ளிகளை தொலைநோக்கு பள்ளிகளாக மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டு டிஜிட்டல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கல்வியை மாணவர்களிடம் கொண்டு செல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளது. குழந்தையின் உடலையும் மனதையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களைப் பயிற்றுவித்து வருகிறது.  பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஆயாக்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கான கற்றல் சூழலை இன்ஸ்பையர்   உருவாக்கி வருகிறது.

;