districts

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதிக்கக்கூடாது: கடலூரில் விவசாயம் சங்கம் வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 21- கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்  துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்  தின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் கடல் பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்க முயற்சி நடந்து வரும் நிலையில் தற்போது குறிஞ்சிப்பாடி, வடலூர், சேத்தியதோப்பு பகுதியில் ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க  ஆய்வு நடத்திட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம்  கடந்த 15ஆம் தேதி விண் ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை சீற்  றங்களால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டமாக இருக் கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தினால் தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு கடல்நீர் உள்ளே புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்  நிலையில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்  கள் செயல்படுத்த அனு மதிக்கப்படும் என்றால் கட லூர் மாவட்டம் சுடுகாடாக மாறும் அபாயம் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு கடல்  பகுதியிலும் நிலப் பகுதியி லும் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சிக்கும் நடவ டிக்கையை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு இத்திட்டங் களை கடலூர் மாவட்டத்தில் அனுமதி அளிக்க கூடாது.   இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;