கிருஷ்ணகிரி, செப்.11- ஓசூர் சாராட்சியர் அலுவலகம் எதிரே, குணம் பன்னோக்கு மருத்துவமனை தொடங் கப்பட்டு 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தமிழ்நாடு பொது பணிகள் தேர்வு ஆணைய தலை வர் எஸ்.கே.பிரபாகர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் பரிசோதனை கூடம், ஆய்வகம், அறுவை சிகிச்சை வளாகம், வார்டுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு மருத்துவ மனையின் இயக்குநர் பொது நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் தலைமை தாங்கினார். எலும்பு சிறப்பு மருத்துவர் இயக்குநர் பிரபுதேவ் முன்னிலை வகித்தார். காது,மூக்கு, தொண்டை, வயிறு, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் இயக்குநர் பிரதீப் குமார் வரவேற்றார். சிறப்பு மருத்துவர் இயக்குநர் கார்த்திக் பாண்டியன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு கிளையின் சிறப்புகள் குறித்து விளக்கினார். இயக்குநர்கள் சிறப்பு மருத்து வர்கள் விஜி,சுப்பிரமணியன், ராஜேஷ் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.