districts

img

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்

சென்னை, நவ.25-

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டபேரவையின் 2021-2022 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் வியாழனன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்து அவ்வறிப்புகளை துரிதப்படுத்தி நிறைவேற்றுதற்கான வழிமுறைகளை வாரியத்திற்கு வழங்கியுள்ளார். மேலும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மற்ற நடவடிக்கைகளையும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், சுற்றுசூழலை பாதுகாப்பதில், குறிப்பாக நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது, தொழில் வளாகங்களில் அதிக பசுமை போர்வை ஏற்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை முறையாக செயல்படுத்துவது மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.

;