districts

img

ஆதிதிராவிட மாணவர்களை புறக்கணிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

விழுப்புரம்.ஜூன் 17- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது, இந்த  பள்ளியில் முண்டியம்பாக்கம், சிந்தாமணி, குச்சிபாளையம், ஒரத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தற்போது  பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது, இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கு  அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட  மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரு டன் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காக வந்திருந்த னர், அவர்களை நேர்காணல் செய்த தலைமை  ஆசிரியர் அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல் ஒரத்தூர் என்று கூறியவுடன், அவர்கள் கொண்டு வந்த கல்வி சான்றி தழ்களை வாங்கி பார்த்து விட்டு, ஆதிதிராவி டர் மாணவர்களை ஒரு வாரத்திற்கு பிறகு வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளார்,

இதுகுறித்து அங்கு சேர்க்கைக்கு வந்த  ஒரு சில பெற்றோர்கள் ஏன் ஆண் பிள்ளை களை சேர்க்க மாட்டீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் ஏற்கனவே இங்கு படித்த ஆதிதிராவிடர் ஆண்  மாணவர்கள் அடங்காமல் அடிக்கடி தக ராறில் ஈடுபடுகின்றனர். முன்னாள் மாண வர்கள் செய்த தவறுக்கும் எங்களுக்கும் என்ன  சம்பந்தம் என கேட்டதற்கு, அடாவடியாக இதுதான் முடிவு என கூறியுள்ளார். இதையடுத்து சிலர்  இதுகுறித்து மாவட்ட  முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்து நேரடி விசாரணை நடத்திய அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர் நான் அப்படி கூறவில்லை என்றும் அதிக மாண வர்கள் இருக்கிறார்கள் என்றுதான் கூறி னேன் என தெரிவித்துள்ளார். அவரது பதிலில் திருப்தியடையாத சிஇஓ  நீங்கள் மாணவர்களை சேர்க்க வேண்டுமே தவிர சேர்க்கை இல்லை எனக் கூற கூடாது, அதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் எனக் கூறியுள்ளார். சில தனி நபர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதி திராவிட மாணவர்களை பள்ளியில் சேர்க்கா மல் புறக்கணிக்கும் தலைமை ஆசிரியர் மீது  மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;