சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் 134-ஆவது பிறந்த நாள் விழாவை யொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ், மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ராமசாமி, அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன்,குப்புசாமி, உமா சாந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.