சென்னை, ஜன.2- சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை வியாழனன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார். மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்மைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்காக, பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்க ளுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலர் கண்காட்சியை காணவரும் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, கேமரா எடுத்து வந்தால் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூ லிக்கப்படுவதால் கண்காட்சியை காண வரும் பொது மக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கட்டணமே இந்த முறை யும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.