districts

img

வேலூரில் இறுதி கட்டப் பிரச்சாரம்!

வேலூர், பிப். 17- வேலூர் மாநகராட்சி 23ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜி.கன்னியப்பனை ஆதரித்து இருசக்கர வாகன பிரச்சாரம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.பி.ராமச்சந்திரன், எஸ்.டி.சங்கரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எஸ்.பரசுராமன், இடைக்குழு செயலாளர் கே.பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் 58ஆவது வார்டில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் இல்லாமல்லியை ஆதரித்து தாலுகா செயலாளர் எஸ்.செல்வி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஜி.நரசிம்மன், சம்பத், புண்ணியமூர்த்தி, சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 19ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வி.மோகனவள்ளியை ஆதரித்து ஆட்டோ, இருசக்கர வாகன பிரச்சாரம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுரேந்திரன், தருமன், ஞானமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.