திருவண்ணாமலை, பிப்.7- திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமம் மூலக் குன்று மலை அடிவாரத்தில், கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அருகில் உள்ள புனல்காடு, தேவனந்தல் மூலக் குன்று மலை அடிவாரத்தில், திரு வண்ணாமலை நகரம், அடிஅண்ணா மலை, வேங்கிக்கால் ஆகிய பகுதி களில் சேகரமாகும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. கடந்த 2022, ஜனவரி முதல் குப்பை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குப்பை கொட்டு வதற்கு மாற்று இடம் தேர்வு செய்து இங்கு குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். லாரிகள் சிறைபிடிப்பு இந்நிலையில், 2025 ஜனவரி 2 ஆம் தேதி திடீரென புனல்காடு மூலக்குன்று மலைப்பகுதியில் இயந்திரங்கள் மூலம் மலையை குடைந்து கனிமங்களை லாரிகளில் ஏற்றும் பணியில் சிலர் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தில் இருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளில் கனிம வளங்களை கடத்த முயன்ற லாரிகளை சிறை பிடித்தனர். ஆர்ப்பாட்டம் இதையடுத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை (பிப்.7) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடே சன் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எம். சிவக்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. செல்வன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.வீரபத்திரன், மாவட்ட நிர்வாகி கள் அ.உதயகுமார், கே.கே.வெங்க டேசன், இரா.பாரி, ஏ.லட்சுமணன், எஸ்.ராமதாஸ், வழக்கறிஞர் எஸ். அபிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் எஸ்.அருண் குமார் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருவண்ணாமலை வட்டம், தேவனந்தல் கிராமத்தில் உள்ள புனல்காடு மலை இயற்கை எழில் மிகுந்த பல மரங்கள், மூலிகைகள், பறவைகள், சிறு விலங்குகள் வாழும் வனப்பகுதியாகும். மூன்று குன்றுகள் ஒன்று சேரும் மழைநீர் அறுவடை பகுதியாகும். நீர் வளம் மிகுந்த பகுதி என்பதால்தான் புனல்காடு (நீர் வளம்) என்ற பெயரை முன்னோர் வைத்துள்ளனர். புனல்காடு மலைப்பகுதி இயற்கை வளம் கொண்டது. நீர் ஆதாரத்திற்கு அடிப்படையானது. புனல்காடு மலையை சுற்றியுள்ள கிராமங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். புனல்காடு மலைப்பகுதியில் மாநக ராட்சி குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதி யில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கும். அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். எனவே புனல்காடு மலைப்பகுதி களில் மலையை குடைந்து மண் அள்ளிய சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், திருவண்ணாமலை மாநகராட்சி புனல்காடு பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.