கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் உளுந்தூர்பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட செயலாளர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட கழக செயலாளர்கள் உதயசூரியன் எம்.எல்.ஏ , வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.