காஞ்சிபுரம், பிப்.9 - காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மை துறை தோட்டக்கலை துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தையினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.50க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் பல ஆயிரம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்து வேளாண் சந்தைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், கீரைகள் மற்றும் சுய உதவிக் குழு பொருட்கள் என வைக்கபட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டு அது குறித்து விளக்கம் கேட்டு அறிந்து கொண்டார்.