கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டு கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் சசிகுமார்,ஒன்றியச் செயலாளர் சிவாஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.