districts

img

கடலூர் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த மக்கள்

கடலூர்,மே .15- கடலூர் அரசு மருத்துவமனையில் இரண்டாவது தவணை கோவக்சின் தடுப்பூசி போட தனிமனித இடை வெளியை கடைபிடிக்காமல் பொது மக்கள்திரண்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிக ரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 600ஐ  கடந்து  பதிவாகி வருகிறது. இந்நிலை யில் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. கடலூர்  மாவட்டத்தில் அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 85 இடங்களில்  தடுப்பூசி முகாம் நடைபெற்று வரு கிறது. இதுவரையில் கடலூர் மாவட்டத்தில் 1,72,692 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் முதல் தவணையாக 1,26,927  பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 45,765 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். இதில் கோவி ஷில்டு தடுப்பூசியை அதிகபட்சமாக ஒரு 1,40,996 பேரும் கோவாக்சின் தடுப்பூசி 31,696 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்க ளாக கோவாக்சின் தடுப்பூசி முற்றிலு மாக தீர்ந்துவிட்டது. முதல் தவணை செலுத்தியவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 2ஆவது தவனை  செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கோவாக்சின் தடுப்பூசி வந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து அரசு மருத்துவமனையில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்காக 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இவர்கள். அனைவரும் தடுப்பூசி முகாம் அறையில் தனிமனித இடை வெளி இன்றி அமர வைக்கப்பட்டனர். இதனால் மேலும் கொரானா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி முகாம் களை அதிகப்படுத்தினால் மட்டும் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;