கடலூர்,நவ.9 - வி.கே.டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ருட்டி, நெய்வேலிஆர்ச் கேட், வடலூர், சோழத்தரம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்ப கோணம், தஞ்சாவூர் செல்லும் வி.கே.டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக சாலை பணிகள் முடிக்கப் படாமல் பாதியில் இருப்பதால் தினந் தோறும் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரி ழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அரசியல் கட்சினர் மற்றும் பொது நல அமைப்பினர் பல கட்ட போராட்டங் கள் நடத்தியும், இதுவரை சாலை பணி களை முடிக்க எவ்வித நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலி
நெய்வேலியில் வி.கே.டி சாலை போராட்டக்குழு தலைவர் வி.முத்துவேல் தலைமையில் நடைபெற்ற மறியலில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், விசிக நெய்வேலி தொகுதி அமைப்பாளர் அ.உ.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து, மதிமுக மாவட்ட செய லாளர் எம்.பிச்சை, காங்கிரஸ் கட்சி இந்திரா நகர் தலைவர் ஏ.அற்புதராஜ், சிஐடியு தலைவர் டி. ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, எல்.எல்.எப் பொதுச் செயலாளர் காசிநாதன், எம்.எல்.எப் பொதுச் செயலாளர் மத்தியாஸ், ஏஐடியுசி பொதுச்செயலாளர் எஸ்.சௌந்தர்ராஜன், எஸ்சி எஸ்.டி நலச்சங்க தலைவர் வீரா பாலு, பொதுச் செயலாளர் மு.மணிசேகரன், திக மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் வி.மேரி, செயலாளர் பி.மாதவி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதானார்கள். பண்ருட்டி பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். பண்ருட்டியில் காந்தி ரோடு பெரு மாள் கோவில் அருகிலிருந்து ஊர்வல மாக புரப்பட்டு நான்கு முனை சந்திப்பில் வட்ட செயலாளர் எஸ்.கே.ஏழுமலை தலை மையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. நகர செயலாளர் ஏ.தேவராஜூலு முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். உத்த ராபதி, டி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடலூர்
வடலூரில் நடைபெற்ற மறியலில் போராட்டம் ஒன்றிய செயலாளர் எம்.பி. தண்டபாணி தலைமை தாங்கி னார். வடலூர் நகர செயலாளர் ஆர். இளங்கோவன், நகர அமைப்பு செயலா ளர், ஒன்றிய குழு உறுப்பினர் வி.கிருஷ்ண மூர்த்தி, மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜ், ஆர்.சிவ காமி, ஆர்.கே.சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கைதாகினர்.
சேத்தியாதோப்பு
சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், திருமுட்டம் வட்ட செயலாளர் தினேஷ் பாபு, வட்டக் குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், வெற்றிவீரன், கிருஷ்ணமூர்த்தி, குமார், தங்கசாமி, விஜய காந்த், சிங்காரவேலு, நமச்சிவாயம், தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.