districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் ஆர்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவெற்றியூர் சன்னதி தெருவில் பிரச்சாரம் கூட்டம் பகுதிக் குழு உறுப்பினர் ஜே.அன்பு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமாரி, பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் சுரேஷ், கிளைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.