districts

வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசலில் சிபிஎம் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் வடக்கு தாலுகா கமிட்டி சார்பில் சைதாப்பேட்டை பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் து.மு.கதிர்ஆனந்துக்கு வாக்களிக்க கோரி தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் தலைமையில் துண்டுபிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எஸ்.பரசுராமன், கமிட்டி உறுப்பினர்கள் மு.காசி, என்.கன்னியப்பன், நரசிம்மன், துரை, சேட்டு கலந்து கொண்டனர்