districts

லயோலா கல்லூரி சார்பில் ஏழை மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

சென்னை, மே 18- சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஏழை மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்பட்டன. சென்னை லயோலோ கல்லூரி புறசேவை  துறையின் சார்பில் ஆக்ஸி மீட்டர், சானிடைசர்,  முகக்கவசம், மருந்துகள் அடங்கிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ஏழை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை அந்தோணி, லயோலா கல்லூரியின் புறசேவை துறை இயக்குநர் அருட்தந்தை லூயிஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறை  மற்றும் கொரோனா தொற்று குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இந்த கொரோனா பாது காப்பு உபகரணங்கள் மூலம் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டு மல்லாமல், மக்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் முதற் கட்டமாக 180 கொரோனா  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறோம், வரும் காலங்களில் கூடுதலாக பொதுமக்க ளுக்கு வழங்கப்படும் என புறசேவை துறை யின் இயக்குனர் அருட்தந்தை லூயிஸ் தெரிவித்தார்.

;