districts

கடலூர் கல்லூரிகளில் 1000 படுக்கைகளுடன் கொரோனா தனிமைப்படுத்தும் மையம்

கடலூர், மே 6- கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்  ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை  30 ஆயிரத்து 474 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 28 ஆயி ரத்து 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலை யில், 329 பேர் பலியாகியுள்ள னர். நாளுக்கு நாள் அதிக ரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக மாவட்  டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  13 கல்லூரிகள் தனிமைப்ப டுத்தும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 10,500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதில் தற்போது கொரோ னாவால் பாதிக்கப்பட்ட 1,706 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக மாவட்  டத்தில் கடந்த ஆண்டு தனி மைப்படுத்தும் மையங்க ளாக செயல்பட்ட கடலூர்  பெரியார் அரசு கல்லூரி,  விருத்தாசலம் கொளஞ்சி யப்பர் அரசு கலைக்கல்லூரி,  பண்ருட்டி அண்ணா பல்  கலைக்கழகம், சி.முட்லூர் அரசு கல்லூரி ஆகியவை வாக்கு எண்ணிக்கை மையங்  களாக மாற்றப்பட்டு, கடந்த ஒரு மாதமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாவட் டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களாக செயல்பட்ட 4 அரசு கல்லூரிகளும், திட்டக்குடி திருவள்ளுவர் அரசு கல்லூரியும் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங் களாக தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சுகா தாரத் துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

;