districts

img

அயன்புரம் நிர்மல் பள்ளி பொறுப்பாளர் தோழர் குமார் காலமானார்

சென்னை, மே 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பி னரும் தொழிற்சங்கவாதியு மான தோழர்  குமார்  கொரோனா கொடிய நோயின் காரணமாக சனிக்  கிழமையன்று காலமானார் அவருக்கு வயது 68.  டிவிஎஸ் லுகாஸ் கம்  பெனி தொழிலாளர்கள் அந்த நிர்வாகத்தின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து சங்கம்  அமைக்க முடிவு செய்த  தோழர்களில் முக்கியமான ரும் தொடர் அடக்குமுறை களுக்கு மத்தியில் தொடர்ந்து  அந்த சங்கத்தை தோளில் சுமந்த பல தோழர்களில் ஒரு வருமான தோழர் குமார்  அந்த சங்கத்தின் பொருளாள ராக கடைசி வரை பணியாற்றி னார். அந்த சங்கத்திற்கு தோழர் விபி சிந்தனை தலை வராக்கி அவரது வழிகாட்டல் களை தேர்ந்த போர்வீரனை போல் லூகாஸ்-டிவிஎஸ் தொழிலாளர்களுக்காக போராடியவர்.

 அவரது மறைவு குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நினைவு கூறுகையில்,  லூகாஸ் டிவிஎஸ் தொழி லாளர் சங்கத்தின் 65 லட்சம்  ரூபாய் ஆரம்ப நிதியில்  நிர்மல் பள்ளி உருவாக்க உறு துணையாக இருந்தவர்.நிர்மல் பள்ளியின்  வளாகத் தில் தோழர் விபி சிந்தன் நிர்மல் உயர்நிலைப்பள்ளி என்ற பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆசையையும் லூகாஸ்-டிவிஎஸ் தோழர்களின் விருப் பத்தையும் காணாமலே மறைந்துவிட்டார். நிர்மல் பள்ளியின் உரு வாக்கத்தில் சி ஐ டி யு பல  பல ஆயிரம் தொழிலாளர்க ளின் பங்களிப்புகள் உண்டு.  இப்போதும் அதற்கு அள்ளி  வழங்கும் அன்புத் தோழர் களின் ஆதரவு இல்லாமல் அதை நடத்த முடியாது. அந்தப் பள்ளியின் துவக்கப் புள்ளிகள் மூன்று என்று கொண்டால் அதில் குறிப்  பிடத்தக்க நபராக விளங்கிய வர் தோழர் குமார். அவரை மருத்துவ மனையில் சேர்ப்ப தற்கு முதல்  நாள்வரை பள்ளியின் அன்றாடப் பணிக ளில் ஈடுபட்டிருந்தார்.  முதல் நாள் இரவு பள்ளிக்  காக என்னிடம் வாங்க வேண்டிய கையெழுத்து பேப்பர்களை என் வீட்டில் ஒப்படைத்துவிட்டு தனக்கு ஜுரமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றவர்.

சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அடுத்தநாள் சேர்க்கப்பட்ட பிறகு நல்ல  சிகிச்சைகளும் பலனளிக்கா மல் அவரை இழந்து இருக்கி றோம். தனிப்பட்ட முறையில் பள்ளி நிர்வாகத்தில் என்னு டைய வலது கரம் உடைந் ததை போல் உணருகிறேன். ஏற்கனவே ஏஜிகேவை இழந்துவிட்டோம். தோழர் குமார் ஆற்றிய பணிகள் விளம்பரம் அற்றது. வெளிச்  சம் காணாதது. இப்படிப்பட்ட வர்களின் உழைப்புதான் சிஐடியு வின் வெற்றியின் அடிப்படை. ஒருவகையில் மிகுந்த துணிச்சல் மிக்கவர் அவர். பல நேரங்களில் சில  தோல்விகளை எதிர்கொள் ளும் போது அதை எதிர்க்கிற  பலத்தையும், வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் குமாரை  போன்ற பல நூற்றுக்கணக் கான எளிய தொழிலாளர்கள் தான் எனக்கு வழங்குகிற மின் ஊக்கிகள். பள்ளி நிர்வாகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி விட்ட தாக நான் உணர்கிறேன். ஈடுகட்டுவது பெரும் சிரமம் ஆயினும் அதையும் நாம் கடக்க வேண்டும் .  தோழர் குமாருக்கு சிஐ டியு மாநில குழுவின் சார்பில்  ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகி றேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரி விக்கொள்வதாக கூறினார்.

;